மகள்களை விட இன்னும் இளமை தோற்றத்தில் நதியா… அவரின் கணவர் தற்போது எப்படி இருக்காங்க பாருங்க… வைரலானகும் குடும்ப புகைப்படம்..!


ஸரீனா மொய்டு என்ற இயற்பெயர் கொண்ட நதியா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். நடிகைகளில் கண்ணியத்திற்கு பெயர் போன நதியா தனது தந்தையின் வழிகாட்டுதலின் படி அவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது தந்தை மிகவும் கண்டிப்புடன் இருப்பாராம். கல்வியில் சிறந்து விளங்கிய நதியா பள்ளிகளில் சேட்டைகள் செய்வதிலும் சுட்டியாம். இதனால் புகார்கள் பெற்றோரிடம் வர அவரது தந்தை அதற்காக தண்டித்துள்ளார். இதனால் சிறு வயது முதலே பெற்றோர்கள் கண்டிப்புடன் வளர்த்ததால் சரியான பாதையில் பயணித்துள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரது பெற்றோரின் பூர்விகம் கேரளா ஆகும்.
நதியா பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவரது வீட்டில் தொலைக்காட்சி கிடையாதாம். இதனால் அவருக்கு சினிமா பற்றிய ஆர்வம் இருந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு அவர் ஐந்து வருட உயர் கல்வியை மும்பையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அவருக்கு மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது பெற்றோர்கள் பெரியளவில் ஆர்வம் இல்லாதபோதும் தனது குடும்ப நண்பரான இயக்குனர் பாசில் அவர்கள் கேட்டுக்கொண்டதால் அவர் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

பூவே பூசூடவா என்ற திரைப்படம் மூலம் 1985-ல் தமிழில் அறிமுகம் ஆகினார். இந்த படத்தில் நடிகை பத்மினியின் பேத்தியாக நடித்து தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கல்லூரி விடுமுறை நாட்களில் மட்டுமே நடித்து கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்க அவர் கல்லூரி படிப்பை நிறுத்தவேண்டிய நிலை வந்தது. அவருக்கு தமிழில் முன்னனியாக இருந்த அனைத்து கதாநாயகர்களுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இருந்தாலும் அவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடித்தார். தமிழில் பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ஸ்டைல் உருவாக்கி கொண்டிருந்தார்.

நதியா சைக்கிள், நதியா கொண்டை, நதியா புடவை, நதியா ட்ரெஸ், நதியா ஹேர் ஸ்டைல் என்று மற்ற எந்த கதாநாயகிகளுக்கும் கிடைக்காத பெருமை அவருக்கு கிடைத்தது. அனைத்து பெண்களும் நதியா போன்று உடை அணிந்து ஹேர் ஸ்டைல் செய்வது80-ஸ் காலகட்டத்தில் இருந்தது.
நதியா திரைப்படத்தில் நடிக்கும் போது அவரது தந்தை உடன் வருவாராம், மேலும் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று நடித்து முடித்ததும், தனது வீட்டிற்கு உடனே கிளம்பி விடுவாராம். அந்த காலகட்டத்தில் பத்திரிகைகளில் நதியா ரோஜா என்றால் அவரது தந்தை முள் என்று பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அவர் தனது மகளை பாதுகாப்பதில் கண்ணும் கருத்தும்மாக இருந்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆன நிலையில் ஓய்வின்றி அவர் சில வருடங்கள் நடித்துள்ளார்.
1988-ல் மும்பையை சேர்ந்த ஸிரிஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சனம், ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் பெயரையும் புகழையும் சம்பாதித்தாலும் சினிமாவில் பெரிய அளவில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவர் சினிமாவை விட தனது குடும்பத்திற்கே முதல் இடம் கொடுத்தார். அவர் கதாநாயகியாக இறுதியில் நடிகர் பிரபுவுடன் அவரது நூறாவது படமான ராஜகுமாரனில் நடித்திருந்தார். அதன் பிறகு பத்து வருட இடை வேளைக்கு பிறகு 2004-ல் m. குமரன் son ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தீபாவளி திருநாளில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவரின் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. வயது ஆக ஆக இவர் இன்னும் இளமை கூடி கொண்டே இருக்கிறார், என சமூக வலைதளவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
