90ஸ் சிரிப்பழகி நடிகை லைலாவா இது…? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..!


லைலா என்றதுமே சிரித்த முகத்தோடு நடிக்கும் அவரது முகம் தான் நம் எல்லோருக்கும் நினைவில் வரும். கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகன் ஆனவர் நடிகை லைலா.

உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா? என சீயான் விக்ரமோடு சேர்ந்து லைலா போடும் நடனம் ரொம்ப பிரபலம். மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய வகையில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்தார் லைலா.

பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. சினிமாவில் பிஸியாக இருந்த போதே, கடந்த 2006ம் ஆண்டு மே மாதம், ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹெதீன் என்பவரை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின்னர் தனது சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லைலா. அதன் பின்னர் இப்போது சில விளம்பரங்களில் தோன்றுகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருக்கிறார். தற்போது அவரின் புன்னகை புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.