ஆட்டோகிராப் நாயகி கோபிகாவா இது… அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்க பாருங்க..!


ஆட்டோகிராஃபில் தன் நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை கோபிகா. இவரது பெயர் கேர்லி அண்டோ, இவர் திருச்சூர், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.2002-ல் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். அப்போது அவர் நடித்த 4-ஸ்டூடெண்ட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் மக்கள் இடம் பிரபலம் ஆனார். இந்த படத்தில் வரும் லஜ்ஜாவதியே……..
பாடல் இன்றும் 90-ஸ் கிட்ஸ்களின் விருப்பமான பாடலாக இருக்கிறது. அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு விழாவின் போது இந்த பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடினார்கள். அதுவும் எப்.எம். இல் கேட்டு ரசிக்காத 90-ஸ் கிட்ஸ் இருக்கவே முடியாது. நடிகர் பரத் மற்றும் நடிகை கோபிகா நடனம் ஆடியது மக்களுக்கு பிடித்த நடிகர்களாக திகழ்ந்தார்கள்.

நடிகை கோபிகா பின்னர் இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் பாடல் மலையாளம் மற்றும் தமிழ் மொழி கலந்த மனசுக்குள்ளே……பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக இருக்கிறது….அதன் பிறகு கனாக்கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை போன்ற படங்களில் தமிழில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திரை துறையில் நடித்துள்ளார்.

2008-ல் ஐஸ்லாந்தில் பணிபுரிந்துவந்த மருத்துவர் அஜிலேஸ் சகோஸ் என்பவரை மணந்து வெளிநாட்டில் குடியேறி விட்டார். தற்போது அவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.சமீபத்தில் அவர் தன் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…..இளமை குறையாமல் தற்போதுள்ள ஹீரோயின்களுக்கு போட்டியாக களம் காணும் அழகில் ஜொலிக்கிறார்…..அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…..
pic1

pic2
