85, 90 களில் கொடிகட்டிப் பறந்த நடிகை அமலாவா இது? இப்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..

தமிழ்த்திரையுலகில் 85, 90 ஆண்டுகளில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளில் ஒருவர் அமலா. மைதிலி என்னை காதலி, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை, மெல்ல திறந்தது கதவு என இவர் நடித்த படங்களும் கிளாசிக்கல் ஹிட் ஆனது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என செம பிஸியாக வலம்வந்த அமலா பீக்கில் இருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்துகொண்டார். 1985 இல் இருந்து 92 வரை பிஸியாக நடித்துவந்த அமலா, தன் திருமணத்திற்குப் பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். பிராணிகளின் மேல் அலாதி ப்ரியம் கொண்ட அமலா, ‘ஐதராபாத் ப்ளூ கிராஸ்’ என்னும் அமைப்பையும் தொடங்கி அதன் தலைவராக உள்ளார். இவரது மகன் அகிலும் இப்போது நடிக்க வந்துவிட்டார்.

நீண்டகாலத்திற்குப் பின்பு அமலாவுக்குள் மீண்டும் நடிப்பு ஆசை துளிர்த்துள்ளது. விரைவிலேயே தமிழ்ப்படம் ஒன்றில் அம்மாவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் அமலா. இவர் தன் கணவர் நாகார்ஜூனா, மகனோடு இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே, நடிகை அமலாவா இது? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.
pic1

pic2
