பக்தி பரவசத்தில் இறங்கிய நடிகை தமன்னா…! அசுர வேகத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்…!

தமிழ் சினிமாவில் கேடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிலும் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, ஜெயம் ரவி போன்றோர்களுடன் நடித்துள்ளார்.

இவர் கவர்ச்சியாக நடனம் ஆடுவதிலும் வல்லவர் இவருடைய நடிப்பு மட்டும் இல்லாமல் இவருடைய நடனத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில் அவர் நடனம் ஆடிய காவலயா என்னும் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

தற்போது நடிகை தமன்னா பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். இறைபக்தியில் மூழ்கிய தமன்னா சாமி தரிசனம் முடித்துவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அசுரவேகத்தில் வைரல் ஆகி வருகின்றன.