அந்த காலத்திலேயே… அரண்மனை போல் பிரமாண்டமாக கட்டப்பட்ட நடிகர் பாண்டியனின் வீடு…

நடிகர் பாண்டியன் அவர்கள் மதுரையை சேர்ந்த வளையல் வியாபாரியினுடைய மகன் ஆவார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வெளிப்புறத்தில் உள்ள வளையல் கடைகளில் வேலை பார்த்தபோது இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அவரை கண்ட மாத்திரத்தில் மண் வாசனை படத்தில் ஹீரோவாக அறிமுக படுத்தினர். 1983-ல் அறிமுக படுத்தப்பட்ட முதல் படத்திலேயே ஹிட் ஆனதால் அவர் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார். உண்மையில் அவர் வளையல் கடைகளுக்கெல்லாம் முதலாளி ஆவார். மண் வாசனைக்கு பிறகு அவர் ஆண் பாவம், குரு சிஷ்யன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார்.

இவர் 2001-ல் அதிமுக கட்சியில் இணைந்து அரசியலிலும் பங்குபெற்றுளார். 2000-ம் ஆண்டிற்கு பிறகு திரை படத்தில் குணசித்ர வேடங்களில் நடித்தார். 2008-ல் மஞ்சள் காமாலை தொற்றினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இயற்கை எய்தினார்.

தற்போது அவரின் நினைவாக அவர் சிறு வயதில் வாழ்ந்த வீடு ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பிரம்மாண்ட வீட்டினை 70 -வதுகளில் அவரின் தந்தை கட்டியுள்ளார். தற்போதும் இந்த வீடானது கம்பீரத்துடன் பார்ப்பதற்கு அரண்மனை போல் உள்ளது. இவருடைய தந்தை அந்த காலத்திலேயே டைல்ஸ் போன்ற கற்களால் தரை தளத்தை அமைத்துள்ளார். இவருக்கு மதுரையில் சொந்தமாக திரையரங்குகளும் இருந்திருக்கிறது.