சாப்பிட்டு 2 நாள் ஆச்சுமா என்று படத்துக்காக நிஜத்திலும் பிச்சை எடுத்த கவின்….! பிச்சையாக கிடைத்தது எவ்வளவு தெரியுமா…!

0

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவின் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய அடையாளத்தை மிகை படுத்தியவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் நடித்த முதல் படம் லிப்ட் இந்த படம் அவருக்கு பெரிதளவில் நல்வாய்ப்பினை அமைக்கவில்லை. மேலும் இவர் நடித்து வெளிவந்த டாடா படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்களும் அதிகளவில் ஆனனர்.டாடா படத்தினை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்தார் மேலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் இயக்கி உள்ள படம் தான் “ப்ளடி பெக்கர்”.

இந்நிலையில் கவின் நடிப்பில் வெளிவர இருக்கிற ப்ளடி பெக்கர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கவின் யாசகராக நடித்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. மேலும் இந்த படத்தில் கவினின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளிவருகிறது மேலும் தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் வெளிவரவுள்ளது. எனவே ப்ளடி பெக்கர் அமரனை தோற்கடிக்குமா இல்லையா என்று படம் வெளியில் வந்த பின்னர் தான் தெறியும்.

மேலும் இந்த படத்துக்காக கவின் உண்மையில் பிச்சை காரன் வேடம் அணிந்து சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகுதுமா என்று சொல்லி ஒரு அக்காவிடம் சென்று பிச்சை கேட்டாராம். அவரும் உண்மையிலே பிச்சை காரன் தான் என நம்பி கவினுக்கு 20 ரூபாய் பிச்சை போட்டார்களாம். அதன் பின்னரே கவினுக்கு ஒரு நம்பிக்கை வந்ததாம். அதன் பிறகு தான் பட பிடிப்பிற்கு செல்லலாம் என்று பட பிடிப்பிற்கு சென்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed