3ஆவது திருமணமா.!!நெட்டிசன்களின் கேள்விக்குள்ளான வீரம் பட நடிகர்… மணப்பெண் யார் தெரியுமா.??
தமிழில் அன்பு படத்தி மூலம் அறிமுகமானவர் சிறுத்தை சிவா அவர்களின் தம்பியான பாலா.தவமின்றி கிடைத்த வரமே என்னும் பாடல் மூலம் படி தொட்டியெல்லாம் பிரபலமானவர்.இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.தமிழில் காதல் கிசு கிசு,தம்பி,கலிங்கா,வீரம் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் கேரளாவில் பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை காதலித்து வீட்டின் எதிர்போடு 2010 ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.ஆனால் 3 வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து கோரி கோர்ட்டை நாடி நின்றனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து கிடைத்து பிரிந்து சென்றனர்.
இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு எலிசபெத் எனும் மருத்துவரை பாலா அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இருப்பினும் முதல் மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டதாகவும்,அவர் இவரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.இதைத்தொடர்ந்து இவரை போலீஸ் கைதும் செய்ததாம்.இதைத்தொடர்ந்து தற்போது இவரது முதல் மனைவியின் குழந்தை ஒரு வீடியோ ஒன்றை வெளியீட்டு அதில் எனது அப்பா எனக்கு எப்போதுமே அப்பாவாக நடந்து கொள்ளவில்லை என குற்றச்சாற்றை வைத்துள்ளார்.
இதற்கிடையில் மூன்றாவது திருமணம் பற்றி தற்போது பாலா அவர்கள் வெளியிட்டுள்ளார்.இப்பொது அவர் பத்திரிகையாளரிடம் என்னுடைய சொத்துமதிப்பு 250 கோடி மேல் இருக்கிறது.இதனால் என் உயிருக்கு ஆபத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.