கார் ரேஸில் கலக்க போகும் நடிகர் அஜித்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் தல ரசிகர்கள்..!

0

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் தான் தல அஜித் குமார். கார் ரேஸ் என்றாலே தல ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவதே தல அஜித் தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாலும் ரசிகர்களுக்கு தல படம் திரைக்கு வந்தால் மட்டும் தான் அந்த பண்டிகை முழுமை அடையும். தல படம் திரைக்கு வருவதை தல தீபாவளி தல பொங்கல் என ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள்.


வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்து படத்தினை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தல ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர் 2025ம் ஆண்டு நடக்க இருக்கின்ற ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளி வந்துள்ளது. மேலும் இதற்காக இங்கிலாந்து மற்றும் பிறநாடுகளில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஸ்பான்ஸர்களும் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *