கார் பந்தயத்தில் சும்மா தூள் கிளப்புவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் தல அஜித்…! காதல் மனைவி ஷாலினி வாழ்த்து…!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் தான் தல அஜித் குமார். தல படம் திரைக்கு வருவதை தல தீபாவளி தல பொங்கல் என ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள்.வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்து படத்தினை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தினை தொடர்நது குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார் மேலும் தல ரசிகர்கள் இந்த இரு படத்தையும் மிகவும் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர். கார் ரேஸ் என்றாலே தல ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவதே தல அஜித் தான். இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது . அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் அஜித்தின் காதல் மனைவி ஷாலினி தற்போது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதாவது தற்போது மீண்டும் அஜித் கார் பந்தயத்தில் பங்கேற்க போகிறார். எனவும் அதற்காக அஜித் ஒரு குழுவினை அமைத்துள்ளார். எனவும் மேலும் Formula BMW Asia, British Formula 3 மற்றும் FIA F2 உள்ளிட்ட கார்பந்தயங்களில் அஜித் கலந்து கொள்வர் எனவும் உங்களுக்கு பிடித்ததை மீண்டும் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு அஜித் ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.