ஆக்சன் கிங்க் அர்ஜுன் இரண்டாவது மகள் தொழில் அதிபரா…? என்ன பிஸ்னஸ் பண்ணுறாங்க பாருங்க..!

action-king-daughter-anjana-sarja-business-news

ஆக்சன் கிங் அர்ஜுன் தமிழ் சினிமாவில் 80-களில் அறிமுகம் ஆனார்.90-ஸ் காலக்கட்டங்களில் வெளிவந்த இவரது படங்கள் தனி தன்மையுடன் இருக்கும். அதற்கு காரணம் தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்து இளைஞர்கள் ராணுவத்தில் தேசப்பற்றோடு பணிபுரியும் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ளார். ஜெயஹிந்த் படத்தில் தேசப்பற்றுள்ள அதிகாரியாக நடித்து தீவிரவாதிகளை அழிக்கும் முனைப்போடு நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ஜெயஹிந்த் பாடல் 90-ஸ் கிட்ஸ்கள் பள்ளியில் சுதந்திரத்தன்று பாடும் பாடலாக இருந்தது.

அர்ஜுன் அவர்கள் நடித்த முக்கிய வெற்றி படங்களில் ஜென்டில்மேன், முதல்வன், ஜெயஹிந்த், கர்ணா, செங்கோட்டை ரிதம், மங்காத்தா இது போன்ற நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது குணசித்திர மற்றும் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தீவிர ஆஞ்சனேய பக்தர் ஆவார்.

ஆக்சன் கிங், தமிழ் சினிமாவின் புருஸ்லீ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் ஆவார்.இவரது தந்தை ஜே.சி.ராமசாமி புகழ் பெற்ற கன்னட நடிகர் மற்றும் இயக்குனர். ஆக்சன் கிங்ன் இயற்பெயர் அர்ஜுன் சர்ஜா. இவரது மனைவி நிவேதிதா அர்ஜுன்,இவர் கன்னட நடிகை, இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா அர்ஜுன், அஞ்சன அர்ஜுன் என்று இரு மகள்கள் இருக்கிறார்கள்.

முதல் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பட்டத்து யானை படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருப்பார். தற்போது அவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இளைய மகள் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தொழில் அதிபராக களம் இறங்கியுள்ளார். பெண்கள் அன்றாடம் வேலைக்கு செல்வதற்கும், வெளியில் செல்வதற்கும் கையில் பை வைத்திருப்பார்கள். இந்த ஹாண்ட் பேக் விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்படுவதாகும். அஞ்சனா இந்த ஹாண்ட் பேக் தொழிலை புதுமையான முறையில் தயாரித்து நடத்தி வருகிறார், புதுமையான முறையில் விலங்குகளின் தோலை பயன்படுத்தாமல் பழங்களின் தோலை கொண்டு கைப்பையை தயாரித்து வருகிறார். உலகில் முதன் முதலாக தாவரங்களின் பழங்களில் இருந்து பெறப்பட்ட தோலை கொண்டு செய்துள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சர்ஜா என்ற தங்கள் குடும்ப பெயரில் இந்த நிறுவனத்தை தெலுங்கானாவில் நிறுவியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் புதுசேரி மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும், ராமோஜி ராவ் பிலிம் சிட்டி நிர்வாக இயக்குனர் விஜய ஈஸ்வரி அவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழ தோலினால் தயாரிக்கப்பட்ட இந்த கைப்பையை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You may have missed