TVK விஜய் அண்ணாக்கு தான் என்னுடைய வோட் என அழுத்தமாக கூறிய சீரியல் நடிகை ஆலியா மானுஷா…

சினிமாவில் இருந்து பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் உதறி விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த செப்டம்பர் 5ல் கட்சியின் முதல் மாநாடு கோலாகலமாக நடந்தது.ஆனால் அந்த மாநாடு வரை விஜய் தம்பி அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறிய சீமான் அவர்கள் மாநாடு முடிந்ததில் இருந்து விஜயை விமர்சித்து கொண்டே வருகிறார். அதற்க்கு காரணம் இதுவரை எந்த மாநாட்டிற்கு கூடாத கூட்டம் கூடியது தான். கிட்டத்தட்ட 14 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் செய்தியாளர்கள் சீரியல் நடிகை ஆலியா மானுஷாவிடம் நீங்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டுள்ளார்கள். அதற்க்கு அவர் என் வோட் கட்டாயம் விஜய் அண்ணாக்கு தான் ஆனால் என்னால் பிரச்சாரம் எல்லாம் செய்ய முடியாது. அதற்க்கு காரணம் என்னுடைய குடும்பம் மற்றும் எண்டுடைய வேலை. எனக்கு முதலில் என் குடும்பம் தான் முக்கியம் எனவும் அழுத்தமாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
