60 நாள் BB வீட்டில் இருந்துவிட்டு வெளியேறிய சாச்சனா… பிக் பாஸ் ஹவுஸை பற்றி வெளியிட்ட முதல் பதிவு…
தமிழ் சினிமாத்துறையில் விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்தவர் தான் சாச்சனா. ஒரே படத்திலே மிகவும் பிரபலமானவர் இவர். பார்ப்பதற்கு குழந்தை நட்சத்திரம் போல் இருக்கும் இவருக்கும் 21 வயது ஆகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பிக் பாசிலும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
BB வீட்டினுள் முதல் நாளிலே எலிமினேஷனில் சிக்கி வெளியே சென்றாலும் மூன்றே நாளில் திருப்பியும் மாஸாக வீட்டினுள் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி மற்றும் தோல்விகளை கண்டா இவர் அவரின் சந்தர்ப்பங்கள் அனைத்தையுமே அழகாக பயன்படுத்தி கொண்டார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வார நாமினேஷனில் சிக்கினாலும் இவரை விஜய் சேதுபதி அவர்கள் காப்பாற்றி விடுவதாக சர்ச்சையும் கிளம்பியது.
இந்நிலையில் 60 நாட்கள் கழித்து சாச்சனா அவர்கள் BB வீட்டிலிருந்து கடந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியே வந்தார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, BB வீட்டினுள் 60 நாட்கள் இருந்தேன் ஒவ்வொரு தடவையும் என்னை நம்பி என்மேல் பாசம் வைத்து ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு நிறைய விஷயங்களி கற்றுக்கொடுத்துருக்கிறது என்று கூறியுள்ளார்.