பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வணங்கான்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்…
சூர்யாவின் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி கொண்டிருந்த படம் தான் வணங்கான். ஆனால் அப்படத்தில் இருந்து சூர்யா அவர்கள் சில காரணமாக விலகவே இதில் நடிக்க அருண் விஜய் அவர்கள் ஒப்புக்கொண்டார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் படம் வரும் பொங்கலன்று வெளிவரும் என ஒரு தகவல் வெளியாகியது.
ஆனால் இதே நாளன்று தான் அஜித் அவர்களின் விடாமுயற்சி படமும் வெளிவர உள்ளதால் ரசிகர்களிடையே ஒருவேளை அஜித்துடன் அருண் விஜய் மோத போகிறாரா என கேள்வி எழும்பியது. இருப்பினும் ரசிகர்களிடையே வணங்கான் பட போஸ்டரை பார்த்துவிட்டு எதிர்பார்ப்பும் கூடிருந்தது. இந்நிலையில் தற்போது வணங்கான் படத்தின் படக்குழுவினர் புது அப்டேட்டை அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் அவர்கள் நடித்துவருகிறரார். இப்படத்தில் இயக்குனர் மிஸ்க்கின் அவரும் முக்கிய வேடத்தில் வருகிறார்.மேலும் சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் போன்றோரும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜீவி. பிரகாஷ் இசையமைக்கிறார். யு/ஏ சான்றிதழ் வாங்கிய இப்படம் வரும் பொங்கலன்று தான் வெளிவரும் என படக்குழுவினர் உறுதி படுத்தியுள்ளனர்.