மாடர்ன் உடையை விட ட்ரென்டிங் சாரியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா…
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து உள்ளவர் தான் நயன்தாரா. இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக தான் இன்றும் உள்ளார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து கரம் பிடித்தார். இப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை நடித்துள்ளார். தற்போது அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார். அடுத்தும் ஹிந்தியில் ஒரு படம் நடித்து கொண்டு உள்ளார். இவர் தற்போது ஒரு பிஸ்னஸ் விமன் ஆகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
தற்போது 39 வயது ஆனா இவர் இன்று வரை இளமையாக தான் உள்ளார். சமீபத்தில் கூட இவரின் வாழ்க்கை வரலாறை வைத்து நயன்தாரா பியான்ட் தி பேரிட்டைல் என்கிற ஆவணப்படம் வெளியாகியது. இந்த ஆவணப்படத்தினால் நயன்தாரா மற்றும் தனுஷ் அவர்களிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டு பல சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் இவர் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பிளேன் கரும்பச்சை சாரியில் விதவிதமாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்றும் இளமையாக இருக்கும் பலரின் கனவு கன்னி என புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
pic1
pic2
pic3
pic4
pic5