தனது புது அப்பார்ட்மென்டில் கிரகப்பிரவேசம் செய்த மணிமேகலை-ஹுசைன் தம்பதியினர்… வைரலாகும் புகைப்படங்கள்…
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் மணிமேகலை. இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு ஒரு பெரும் மதிப்பை வாங்கி கொடுத்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். இதில் இவர் தொகுப்பாளர் ஆக பணியாற்றியதன் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆர்வம் காட்டுபவர். இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து இன்ஸ்ட்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்வது இயல்புதான். இவரை காதல் கதை பல எதிர்ப்பை சந்தித்தாலும் பல தடைகளையும் தாண்டி திருமணம் செய்து கொண்டார்கள். இவர் இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இந்த சீசனில் வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னால் குக் வித் கோமாளியில் ப்ரியங்காவுடன் சண்டை போட்டு கொண்டு அந்த வெளியேறினார். அதைத்தொடர்ந்து சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விஜய் தொலைக்காட்சியையும் விட்டு விலகினார். இது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மணிமேகலை – ஹுசைன் தம்பதியினர் சென்னையில் ஒரு இடத்தில் அப்பார்ட்மெண்ட் வாங்கி கிரகப்பிரவேசம் செய்துள்ளார்கள். மிக ஆனந்தமாக இந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் மணிமேகலை பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
pic1
pic2
pic3
pic4