என்னது கனவில் பாம்பு வந்தால் அதிர்ஷ்டசாலியா..!! வெள்ளை நிற பாம்பை பார்த்தால் இவ்வளவு நல்லதா..!!
பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கேற்றவாறே நாம் அனைவருமே பாம்பை கனவிலோ நிஜத்திலோ பார்த்தால் பாய்ந்து நடுங்கதான் செய்வோம். கனவில் பாம்பு வந்தால் தூக்கத்தில் இருந்து விழித்து கடவுளிடம் இனி பாம்பு கனவு வரக்கூடாது என வேண்டிக்கொள்வோம். இனி அப்படி வேண்ட வேண்டாம் யாரும். கனவில் பாம்பு வருவது மிக மிக நல்லதாம்.
நம் கனவில் பாம்பு வந்து உங்கள் தலையின் மீது அமர்ந்திருப்பது போன்று இருந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேல்நோக்கி செல்வீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களுக்கு பயங்கரமான மரியாதை கிடைக்கும் என்றும் அர்த்தமாகும். அதைவிட பாம்பு உங்களையே விழுங்கிவிடுவது போன்று தெரிந்தால் நீங்கள் வியாபாரத்தில் தலை சிறந்து விளங்குவீர்கள் என்று அர்த்தமாம்.
கனவில் பாம்பு வேட்டையாடி விழுங்குவது போன்று வந்தால் நீங்கள் வெற்றி கோடியை தொட போகிறீர்கள் என்று அர்த்தம். இதை போன்று வெள்ளை நிற பாம்பை கனவில் கண்டால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்குமாம். உங்களுக்கு அனைத்து நன்மைகளும் உடனே கிடைக்குமாம். மேலும் தங்க நிற பாம்பு கனவில் வந்தால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலி ஆவீர்கள். மேலும் உங்களின் முன்னோர்கள் அருள் சீக்கிரம் உங்களுக்கு கிட்டும் .