இன்ஸ்ட்டாவில் புகைப்படங்களை பகிர்ந்து தன் கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறிய ஹன்ஷிகா… அதற்குள்ள 2வருடம் ஆகிடுச்சா..!! வியந்த ரசிகர்கள்…
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 2011ல் எங்கேயும் காதல் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் ஹன்ஷிகா மோத்வானி. இவரின் முதல் படமே தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை வாங்கி கொடுத்தது. இப்படத்தில் இவர் கொழுகொழுவென ரொம்ப அழகாக இருப்பார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களை நடித்துள்ளார்.
ஹன்ஷிகா மற்றும் ஜெயம் ரவியின் ஜோடிக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த அளவு மிக பொருத்தமான ஜோடிகளாவார்கள். இதைத்தொடர்ந்து இவர் தனுஷ் அவர்களுடன் மாப்பிளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் போன்ற படங்களில் நடித்து கலக்கியிருப்பார். இவரின் அரண்மனை படம் சூப்பர் ஹிட் அடித்தது. பேய் வேடத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். இதனை அடுத்து இவர் தன் உடலமைப்பை மாற்றி அமைத்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறையத்தொடங்கின. இந்நிலையில் இவர் நடித்து வெளியே வந்த மாயா படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத்தொடர்ந்து இவர் தனது நண்பரான சோஹா கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களி இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து 2வது வருட திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதற்குள்ளையா 2 வருடங்கள் ஆகிட்டு என கமெண்ட் செய்து வருகின்றனர்.