புது அப்டேட்டை வெளியிட்டிருக்கும் தளபதி 69 படக்குழுவினர்… தமிழ் புத்தாண்டிற்கு வெளிவர இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…
சினிமாத்துறையில் கடைசியாக ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு முழுவதுமாக அரசியலில் நுழைய உள்ளார் நடிகர் விஜய் அவர்கள். அந்த வகையில் சிறப்பாக பூஜை போட்டு உருவாக்கி கொண்டிருக்கும் படம் தான் தளபதி 69. இப்படம் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்திலும் லியோவில் விஜயுடன் ஜோடி போட்ட பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் அனிமல் பட புகழ் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி போன்றோர்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் ஷெட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் அதிகம் அரசியல் போர்களம் இடம்பெற்றுள்ளதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கேவிஎன் இப்படத்தை தயாரித்து கொண்டு வருகிறது. மேலும் இப்படத்தின் நியூ அப்டேட்டாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டு வெளிவர உள்ளதாக அறிவித்துளார்கள்.