தமிழ் மொழியை பெருமையாக கூறிய காந்தார பட நாயகன்…

கன்னட சினிமா துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி பயங்கரமான வெற்றியை தந்த படம் தான் காந்தாரா. இப்படம் மக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கிய ரிசப் ஷெட்டியே இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 20 கோடி செலவில் உருபவான இப்படம் எதிர்பார்த்ததை விட அமோக வெற்றி கொடுத்து 450 கோடி வசூல் செய்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி காந்த் அவ்ர்கள் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்திருந்தார். மேலும் பல முன்னணி நடிகர்கள் அவரை வாழ்த்திருந்தார்கள்.இப்படத்தின் முழுக்கதையும் கன்னட மக்களின் பழங்கால வாழ்க்கையை கூறும் விதமாக இருந்தது. இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இப்படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பக்கமும் உருவாகி கொண்டு இருக்கிறது.

கூடிய விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறும் பொது நான் பெங்களூர் பையன் அது ஒரு மினி இந்திய அங்க எல்லா மொழிக்காரர்களுமே இருப்பார்கள். நான் 2004ல் தமிழ் ஒருபடத்தில் அசிஸ்டன்ட் டிரேக்டரா வொர்க் பண்ணுனேன். காப்போம் தமிழை 27 நாளில் கத்துக்கிட்டேன் என கூறியுள்ளார்.

You may have missed