இட்லி கடை படத்தின் லீக் ஆன புகைப்படம்… துள்ளுவதோ இளமை பட சாயலில் மீண்டும் தனுஷ்…
துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் தனுஷ். இவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் இவர் மீசைகூட இல்லாத சிறு வயது கதாநாயகனாகவே சினிமாவினுள் வந்தார். இப்படத்தில் இவரின் சேட்டை கூட அப்பாவித்தனமாக இருக்கும் எனலாம். இப்படத்தில் கதாநாயகியாக ஷெரின் நடித்திருந்தார்.இவரின் தந்தை தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் தனுஷ் அவர்கள் இளம் ரசிகர்கள் பல பேரின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டார். இப்படத்தை தொடர்ந்து இவர் இதை மாதிரியாக படங்கள் நடித்து கொண்டு இருந்தார். இவரின் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் வெளிவந்த பாடலான மன்மதராசா சாங் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஆடுகளம், புதுப்பேட்டை, பொல்லாதவன் என பல படங்களில் அவரின் நடிப்புத்திறமையை காட்டி இன்று தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் முன்னணி நடிகராகவும் வளர்த்துள்ளார.
இந்நிலையில் தனுஷ் அவர்கள் இயக்கி நடிக்கும் படமான இட்லி கடை படத்தின் ஸ்டில் வெளியாகியுள்ளது. இதில் அவர் துள்ளுவதோ இளமை படத்தில் இருந்தது போலவே மிக அருமையாக இருப்பது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த மாற்றம் இவரின் கடின உழைப்பை குறிக்கிறது எனலாம். இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் துள்ளுவதோ இளமை வெளிவருகிறதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.