மஞ்சரிக்கு ஆதரவாக விஜய் சேதுபதியை வெளுத்து வாங்கிய பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி… வைரலாகும் வீடியோ…
விஜய் டீவியில் கடந்த 7 வருடங்களாக உலக நாயகன் கமல்காசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் ஷோவை இந்த வருடம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிபி-8. இதில் போட்டியாளராக 18 நபர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது எலிமினேஷன் மூலம் ஒவ்வொரு நபர்களாக வெளியேறி உள்ளார்கள்.
எட்டாவது சீசன் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் தன்மைக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருந்தது. இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த ளவு சுவாரசியம் இல்லை என மக்களிடையே இருந்து கமெண்ட் வந்து கொண்டே தான் இருந்தது. பலரும் எதிர் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி அவர்கள் தற்பொழுது அவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கருப்பு கண்ணாடி போட்ட விஜய் சேதுபதி அவர்களுக்கு கண்ணு தெரியவில்லை. எல்லோரின் கருத்துக்களையும் கேக்க நேரமிருந்த விஜய் சேதுபதிக்கு மஞ்சரியை புல்லி செய்வதை ஒரு நிமிடம் கேக்க முடியவில்லையா என ஆத்திரத்தில் கத்தியுள்ளார். மேலும் எங்களின் சப்போர்ட் மஞ்சரிக்கு தான் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.