யாருடா இந்த போட்டியெல்லாம் கண்டுபிடிக்குறது..? பெண்களுக்கு ஏற்ற சிறப்பான போட்டி இதுதான்.. நீங்களே பாருங்க..!

   ’சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அவர், அவர் கிராமம் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் கிராமத்தில் இருப்பதே வரம் என்ற் சொல்லிவிடலாம். அவர்கள்தான் வித்தியாச வித்தியாசமான போட்டிகளிலும் அசத்துவார்கள். 

         ‘விளையாட்டு’ தான் நம்மை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

  மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது. 

  ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால் இந்த கிராமத்தில் பெண்கள் சேர்ந்து நடத்திய ஒரு போட்டி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

  அப்படி என்ன போட்டி நடந்தது என்கிறீர்களா? பொதுவாகவே பெண்களைப் பற்றி சொல்லும்போது இன்னொரு வீட்டுக்கு விளக்கேற்றச் செல்பவர் என்று சொல்லிதான் கேட்டிருப்போம். இங்கே போட்டியும் அப்படித்தான். இந்த போட்டிக்கு பெயர் கொடுத்த பெண்களை வரிசையாக அமரச்சொல்லி ஆளுக்கு ஒரு குத்துவிளக்கு கொடுத்தனர். அதில் 5 திரிகள், எண்ணெய்கள் தனியாகக் கொடுக்கப்பட்டு, யார் முதலில் அனைத்து விளக்குகளையும் ஏற்றுகிறார்கள் என்பதுதான் போட்டி. அடடே கிராமத்தில் இப்படி ஒரு போட்டியா? என பார்ப்பவர்களும் அதிசயத்துப் போனார்கள். இதோ நீங்களே இதைப் பாருங்களேன். 

You may have missed