நியூ அப்டேட்டை வெளியிட்ட சூர்யா-45 படக்குழுவினர்… படத்தில் இணையும் பாலிவுட் நாயகி.!!

0

எதற்கும் துணிந்தவன் படத்தின் பிறகு இரு வருடங்களாக சூர்யாவின் படங்கள் ஏதும் வெளிவராததால் சூர்யாவின் ரசிகர்கள் மிக வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் வருகின்ற நவம்பர் 14 ஆம் தேதி அன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற திரைப்படம் சூர்யாவின் நடிப்பில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவர இருக்கிறது என்பது ரசிகர்களை மிக ஆர்வத்துடன் துள்ளி குதிக்க வைத்துள்ளது எனலாம்.

இப்படத்தில் AI மூலம் சூர்யாவின் குரலை தான் அனைத்து மொழிகளிலும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 26 ஆம் தேதி இப்படத்தை இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சூர்யா-45 என்கிற படம் தயராகி கொண்டுள்ளது.இதையும் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இப்படத்தில் சீதா ராமன் படத்தின் மூலம் மக்கள் மனதை வென்ற மிருணாள் தாகூர் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர்தான் கங்குவா படத்தில் முதலில் கதாநாயகியாக பேசப்பட்டாராம் ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விடபட்டது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *