உச்சரிப்பு தான் தமிழில் முக்கியம்… என் கோபம் BB முத்துக்குமரன் மீது தான்… ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு..!!

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என விறுவிறுப்பாக விஜய் சேதுபதியின் தொகுப்பில் கடந்த இருவாராம் முன் கோலாகலமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் BB-8.இதில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, , ரஞ்சித், தர்ஷிகா, அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன்,போன்ற 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் முதல் நாளே சாச்சனா வெளியே சென்றதும் பின் உள்ளே வந்ததும் என பல திருப்பங்களை கொடுத்தார் பிக் பாஸ்.

முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் வெளியே சென்றார்.இரண்டாம் வார எலிமினேஷனில் அர்னாவ் வெளியே சென்றுள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து விளையாட்டுகளிலும் மிக திறமையாக விளையாடி இவர் இறுதி கோப்பை அடிப்பார் என்று மக்கள் வாயாலே சொல்லவைத்தவர் தான் முத்துக்குமரன்.இந்நிலையில் இவர் நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி எழுதி சிவாஜிகணேசன் பேசிய வசனம் ஒன்றை பேசி இருப்பார்.இதை குறித்து தற்போது ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் விமர்சித்து உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,விஜய் டிவி-யில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் முத்துக்குமரன் என்பவர் .இவர் தற்போது ஒரு வசனம் மிக அழகாக பேசி இருப்பார்.அதில் இவ்வளவு அழுத்தமாக தமிழில் சுமார் 5 நிமிடம் மேல் வசனம் பேச தெரிந்த இவருக்கு உச்சரிப்பு என்பது சுத்தமாக தெரியவில்லை என ஜேம்ஸ் வசந்தன் குற்றச்சாற்று வைத்துள்ளார்.

You may have missed