மணக்கோலத்தில் மாநாடு கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன்.. குழம்பிப்போன ரசிகர்கள்…

0

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன்.இவர் தமிழில் மாநாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை பிடித்து வைத்திருக்கிறார் .இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.

தற்போது இணையத்தில் இவரது திருமண பேச்சு தான் மிக வைரலாக போய் கொண்டு இருக்கிறது.இடையில் கல்யாணி அவர்களும் மலையாள சின்னத்திரை நடிகருமான ஸ்ரீராம் அவர்களும் மணக்கோலத்தில் மாலை மாற்றி கொள்வது போல் ஒரு வீடியோ இணையத்தில் யாரும் சற்றும் எதிர்பாரத அளவில் வைரல் ஆகியது.இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் குழம்பி போனார்கள் ஏனென்றால்,ஸ்ரீராம் அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.

இந்த குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.மணக்கோலத்தில் இவர்கள் வெளியிட்ட வீடியோ ஒரு விளம்பர ஷூட்டிங்காகா எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.ஆனால் இந்த வீடியோவை பார்த்த அனைவருமே இவர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இந்த குழப்பற்றத்திற்கெல்லாம் காரணம் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் தான் இவரே இந்த விடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஜெயம் ரவி உடன் கதாநாயகியாக ஜீனி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed