36 ஆண்டுகளாக ஆண் வேடம் போட்டு… பெண் செய்துவரும் செயல்.. இப்படியொரு தியாக வாழ்க்கையை பார்த்திருக்கவே மாட்டீங்க…

        தங்கள் குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து பெரியவர்களாக்க வேண்டும் என்னும் கனவு அனைவருக்கும் இருக்கும். அதற்காக அவர்களின் எல்லைக்கோட்டில் இருந்து பல தியாகங்களும் செய்வது வழக்கம் தான். ஆனால் இங்கே ஒரு பெண் தன் மகளுக்காக செய்த தியாகம் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

  தூத்துக்குடி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(57) இவருக்கு 20 வயதில் கல்யாணம் நடந்தது. ஆனால் ஒரு மாதத்திலேயே அவரது கணவர் இறந்துவிட்டார். அப்போதே, கர்ப்பமாகி இருந்த பேச்சியம்மாள் அதில் இருந்து, பத்தாவது மாதத்தில் மகள் சண்முகசுந்தரியை பெற்றெடுத்தாள். ஆனாலும் தனது மகளுக்காக இன்னொரு கல்யாணமே செய்யாமல் அவரை நல்லபடியாக வளர்க்க விரும்பினார். பெரிதாக படிக்காத பேச்சியம்மாள் இதற்காக கிடைத்த வேலையெல்லாம் செய்தார்.

கட்டுமானப் பணி, ஹோட்டல் வேலை, டீக்கடை மாஸ்டர் என பலவேலையும் செய்தார். ஆனால் தனி ஒருத்தியாக கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வாழும் இளம்பெண் என தெரிந்தால் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் வரக்கூடும் என பயந்த பேச்சியம்மாள் தன் உருவத்தையே ஆணைப் போல மாற்றிக்கொண்டார். இதற்காகவே ஆண்களைப் போல் சட்டை, வேட்டி கட்டிக்கொண்டு வாழத் தொடங்கினார். சட்டையும், லுங்கியும் அவரது இஷ்டமான உடையானது. கிட்டத்தட்ட 36 வருடமாகவே இப்படித்தான் வாழ்ந்து வருகிறார் பேச்சியம்மாள்.

  ஒருகட்டத்தில் டன் செல்ல்ல மகள் சண்முகசுந்தரியும் தானே உழைத்து, சேர்த்தக் காசில் கல்யாணம் செய்துவைத்துவிட்டார். இது மட்டும் இல்லாமல் தன் மகளை ஆண்களின் தொந்தரவு இன்றி வளர்க்க இந்த யுத்தியை கையில் எடுத்த சுந்தரி இதற்காகத் தன் பெயரை முத்து எனவும் மாற்றிக்கொண்டார். இப்போதும் கூட சண்முக சுந்தரியின் ரேசன்கார்டு, ஆதார் அட்டை, வோட்டர்ஸ் ஐடி உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களிலும் ஆண் பெயரிலேயே இருக்கிறார். அவரது இளமைக்கால புகைப்படமும், இப்போதைய புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.