மக்களுக்கு நினைவூட்டும் விதமாக திரையில் மீண்டும் கேப்டனை காட்டி “லப்பர் பந்து டீம்” செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்…
சமீபத்தில் வெளியான தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அட்டகத்தி தினேஷ் நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரையுலகினரும் லப்பர் பந்து திரைப்பட குழுவினரை பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை மீண்டும் திரையில் காட்டும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. மேலும் கேப்டனின் தீவிர ரசிகரான அட்டகத்தி தினேஷ் இந்த படத்திலும் கேப்டனின் ரசிகராகவே நடித்திருப்பார். அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட்டில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்திருப்பார். இந்த படம் கிரிக்கெட்டை முக்கிய கருத்தாக கொண்டு எடுக்கப் பட்டிருக்கும். கிரிக்கெட் உள்ளூரில் எங்கு நடைபெற்றாலும் அங்கு அட்டக்கத்தி தினேஷ் காணப்படுவார்.
இன்னொரு பக்கம் சொந்த கிராமத்திலேயே சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யானை ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் மீது உள்ள மோகத்தால் கிரிக்கெட் விளையாட வருவார். அட்டக்கத்தி தினேஷ்க்கும் ஹரிஷ் கல்யாணக்கும் இடையில் ஈகோ வளர ஆரம்பிக்கும். ஹரிஷ் கல்யாண் அட்டக்கத்தி தினேஷின் மகள் தேவ தர்ஷினியை காதல் செய்வார்.அதன் பிறகு இருவர்க்கும் எப்படி ஈகோ உடைகிறது என்பதை விளக்கும் படமாக அமைந்துள்ளது .
மேலும் இந்த படத்தில் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு பற்றிய கருத்துக்களையும் படம் பார்க்கும் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்க்கு இயக்குனர் படத்தில் காட்சிகளை வைத்துள்ளார். இரு ஆண்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை, காதல், கணவன் மனைவி உறவு பற்றியும் மாமியார் மருமகள் உறவு பற்றியும் இந்த படத்தில் காட்சிகள் வருகின்றனர். பெண்களுக்கும் இந்தப்படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
படத்தின் ஹைலெட்டே அட்டகத்தி தினேஷ் அறிமுகம் செய்த விதம் தான் அவரை திரையில் காட்டும் பொது 80s ன் விருப்பமான பாடலான கேப்டனின் “பொட்டு வச்ச என் தங்க குடம்”பாடல் ஒலிக்க ஆரம்பிக்க அட்டகத்தி தினேஷ் கம்பீரமாக வந்து தன் முகத்தை காட்டியிருப்பார். அதனாலே இந்த படத்தில் அவரை “கெத்து” என்று தான் அழைப்பார்கள் மேலும் படத்தில் அட்டக்கத்தி தினேஷின் பைக்கில் கேப்டனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். அது கேப்டனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிற.து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த லப்பர் பந்து படத்தின் குழுவினர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மரியாதையை செய்யும் விதமாக மலர்வளையம் வைத்தும் வணங்கியும் வந்துள்ளனர். இந்த வீடியோ இணைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேப்டனின் மனைவியான பிரேமலதா அலுவலகத்திற்கும் லப்பர் பந்து படத்தின் குழுவினர் சென்று பிரேமலதாவிடம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.