ஏ.சி பயன்பாட்டால் கரண்ட் பில் எகிறுதா..? ஈஸியா குறைக்க இதை பாலே செய்யுங்க…

இன்று ஏ.சி இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் என சொல்லும் அளவுக்கு கிராமப் பகுதிகளில் கூட ஏசி பெருகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க குளு,குளுவென ஏசியில் இருக்கும் நம் மக்கள் அதனால் வரும் கரண்ட் பில்லை பார்த்துத்தான் அறண்டு போகிறார்கள்.

வெயில் நேரத்தில் அதிக அளவு ஏசி பயன்படுத்துவதால் கரண்ட் பில் கூடும். ஏசியில் 15 நாளுக்கு ஒருமுறை அந்த பில்டர் கிளீன் செய்து கொண்டே இருக்கும். அதுபோக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏசி மெக்கானிக்கை கூப்பிட்டு உள்ளே உள்ள பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக கம்பிரஸரை சுத்தம் செய்யணும்.

இதுபோக, நாம் பொதுவாகவே ஏசியில் டெம்ரேஜரை குறைக்க, குறைக்கத்தான் நன்றாக காற்று வரும் என நினைப்போம். ஆனால் அது பொய்யான தகவல். டெம்ரேஜரை குறைத்துக் கொண்டே இருந்தால் நமக்கு கரண்ட் பில் தான் அதிகமாகும். அதே நார்மல் டெம்ரேச்சர். அதாவது ரூம் வெப்பநிலையிலேயே 24 டிகிரி செல்சியஸில் வைத்தீர்கள் என்றால், கூலிங் வந்தவுடன் கம்ப்ரஸர் கட் ஆகி, தானாகவே கூலிங் மட்டும் வந்துட்டே இருக்கும். உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் கம்ப்ரஸர் நின்று விட்டாலே உங்களுக்கு ஏசியின் வெளிப்பகுதி மட்டும் தான் ஓடிக்கொண்டு இருக்கும்.

இதனால் ரூமின் குளிர்ச்சியும் மெயிண்டைய்ண் ஆகும். கரண்ட் பில்லும் நிச்சயம் குறையும். எப்போதுமே ஏசியில் வெப்பநிலையை குறைக்கும் முன்பு ஒருமுறை யோசித்துக் கொள்ளுங்கள். முறையாக சர்வீஸ் செய்யப்பட்டு, சரியாக பராமரிக்கப்படும் ஏசியில் 24 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில் கம்மியாகும். முயற்சித்து பாருங்கள். அப்புறமென்ன எப்போதுமே குளு,குளுவென இருங்கள்…

You may have missed