அக்காவின் பிரிவை தாங்க இயலாது தேம்பி தேம்பி அழுத தங்கை… பலரின் மனதை ஈர்த்த காணொளி..!

உடன் பிறப்புகளான அண்ணன் -தங்கை, அக்கா- தங்கை, அக்கா- தம்பி போன்ற உறவுகள் ஒன்றாக இருக்கும் வரை சண்டை பிடிப்பதே வேலையாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பொதுவாக பெற்றோர்கள் வாங்கி தரும் பொருட்களுக்கு சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் அக்கா, தங்கை என்றால் தங்கைகள் எல்லாம்……. வீட்டில் மூத்தவள் என்று அக்காவிற்கே அனைத்தையும் வாங்கி தருகிறீர்கள் என்றும்……., அக்காக்கள்……… வீட்டில் சிறியவள் என்று அவளுக்கு மட்டும் செல்லம் கொடுக்கிறீர்கள் என்று மாறி மாறி…. அங்கலாய்த்து கொள்வார்கள்.

சிறிய வயதில் விளையாட்டு பொருட்களில் ஆரம்பிக்கும் இவர்களது சண்டை தின்பண்டங்கள், உடைகள் , நகைகள் என்று இவர்களது பட்டியல் நீளும். வீட்டில் வேலைகள் செய்வதற்கும், அந்த வேலை அவள் செய்யட்டும், இந்த வேலை நான் செய்கிறேன் என்று எளிதாக இருக்கும் வேலைகளை தேர்ந்தெடுத்து இருவருக்குள்ளும் பெரிய பஞ்சாயத்தே நடக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள்.

மேலும் பெற்றோர்கள் மீதும் கோபம் கொள்வார்கள்….அவளுக்கு மட்டும் எல்லா விஷயங்களிலும் அதிகம் செய்வார்கள் என்று மாறி மாறி குறை கூறி கொள்வார்கள். ஆனால் இவர்கள் திருமணம் முடிந்து பிறந்தகத்தில் இருந்து உறவுகளிடம் இருந்து விடை பெற்று புகுந்த வீடு போகும் போது இருவரையும் அறியாது கண்களில் இருந்து நீர் துளிகள் உருண்டு ஓடும். அவர்களையும் அறியாது அக்கா மற்றும் தங்கை இருவருக்கும் ஒருவர் மேல் இன்னொருவர் கொண்ட பாசம் வெளிப்படும்.

பிறந்தது முதல் ஒன்றாக இருந்த உறவுகள் திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரியும் தருணம் இருவரையும் துயரில் ஆழ்த்திவிடும். சில சமயங்களில் உடன் பிறந்த சகோதரிகளின் உறவு அம்மா மகள் போன்று இருக்கும். என் அக்கா அம்மா போன்று என்னை வளர்த்தாள் என்று கூறும் உறவுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கே காணொலியில் திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு புறப்பட்டு சென்ற அக்காவின் பிரிவால் தங்கை கட்டுப்படுத்தி கொள்ள இயலாமல் தேம்பி தேம்பி அழுத காட்சிகள் இணையவாசிகளையும் கலங்க வைத்துள்ளது…..இந்த காட்சிகள் சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காணொலியை இங்கே காணலாம்……