இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது… வறுமையால் தவிக்கும் குழந்தையின் சின்ன ஆசையை நிறைவேற்றிய ஊழியர்…!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். எந்த உயிர்கள் பசியால் வாடுகின்றனவோ அவற்றை தனக்கு நேர்ந்த பசியாக கருதி அந்த பசியை போக்கியவர் வள்ளலார். இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை. ஆனாலும் மக்கள் நம் வாழ்க்கை என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். வீடு இல்லாதவர்கள் என்றாவது சொந்தமாக வீடு வாங்கிவிட வேண்டும் என்றும் , இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இல்லாதவர்கள் உழைத்து அதனை வாங்கிட வேண்டும் என்றும் அவரவர் வாழ்விற்கு என்ன தேவையோ அவற்றை நோக்கிய பயணத்தில் பயணிக்கிறார்கள்.
குழந்தைகள் பெரிதாக ஆசை கொள்வது இல்லை. அவர்களுக்கு பெரும்பாலும் உணவு, விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்றவற்றின் மேல் விருப்பம் இருக்கும். குழந்தைகளுக்கு கார்ட்டூன் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கார்ட்டூன் சேனல் விரும்பி பார்ப்பார்கள். சோட்டா பீம், shinchan, டோரா, டைட்டன்ஸ்,டாம் அன்ட் ஜெரி போன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகள் மத்தியில் உள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகும்.தற்காலத்தில் இந்த சின்ன சின்ன ஆசைகள் அனைவருக்கும் கிடைக்கும் என்றாலும் இன்னமும் இந்த அடிப்படை வசதிகள் கிடைக்காத குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இங்கு காணொலியில் எலக்ட்ரானிக் ஷோ ரூம் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கார்ட்டூன் நிகழ்ச்சியை வறுமையால் வாடிய குழந்தைகள் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை கவனித்த கடை ஊழியர் அந்த குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூனை மாற்றி கொடுத்தார். இதனால் அந்த குழந்தைகள் பெரிய திரையில் ஒளி பரப்பு செய்யப்பட்ட கார்ட்டூனை கண்டு மகிழ்ந்தனர். நம்மால் அவர்களின் வாழக்கை தரத்தை மாற்ற முடியாவிட்டாலும் அவர்களுக்கும் மதிப்பளித்து அவர்களின் சின்ன ஆசைகளை நிறைவேற்றி அவர்களுக்கும் மகிழ்ச்சியை பரிசளிக்கலாம்….. என்று சமூக வலைதளவாசிகள் இவரின் செயலை பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த மனிதாபிமான காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது……