90’ஸ் சாக்லேட் பாய்… காதல் தேசத்தின் காதல் நாயகன் அப்பாஸின் நிலைமையை கண்டு வருந்திய சமூக வலைத்தளத்தினர்… எதற்காக தெரியுமா…?


காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன அப்பாஸ் இந்த படத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைல் பின்பற்றியிருப்பார். 90-கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக இருந்தது முஸ்தப்பா முஸ்தப்பா……. நண்பர் கூட்டங்களுக்கு இப்போதும் பிடித்த பாடலாக இருக்கும், மேலும் இந்த பாடலில் அவரது நடனத்தை விட அவரது தலை முடி ஆடிய ஆட்டத்தால் அப்போதைய கிட்ஸ் அப்பாஸ் ஹேர் கட் செய்ததும் உண்டு.

நடிகர் அப்பாஸ் கவ்ரா, மேற்கு வங்காளத்தில் பிறந்துள்ளார். 47 வயதாகும் இவருடைய முழு பெயர் மிஸ்ரா அப்பாஸ் அலி.இவர் திரை துறையில் தோன்றுவதற்கு முன்பாக இவர் மாடலாக பணிபுரிந்துள்ளார். இவரது தாத்தா சினிமாவில் நடிகராக இருந்துள்ளார். 2001-ல் எர்ரம் அலி என்ற பேஷன் டிசைனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.
இவர் இளம் வளர் பருவத்தில் தற்கொலை எண்ணம் கொண்டவராக இருந்துள்ளார். பின்னாட்களில் சினிமா துறையில் வந்த பிறகு இவருடைய வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்துள்ளன. காதல் தேசம், கண்டுகொண்டேன்…. கண்டுகொண்டேன்…. ஆனந்தம்… போன்ற படங்களில் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளார், மேலும் குடும்ப பாங்கான கதைகளில் மட்டுமே தோன்றியுள்ளார். இவர் தமிழ், தவிர தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மாநில மொழி திரைப்படங்களிலும் தடம் பதித்துள்ளார்.

அதிகமாக பேட்டிகள் கொடுப்பதில் விருப்பம் இல்லாததால் இவருடைய சமீபத்திய நிகழ்வுகள் திரை துறையில் இல்லை எனலாம். தற்போது இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராக உள்ளார். தான் திரை துறையில் வேலை செய்ததை விட இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேசாளராக பணிபுரிவதில் விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இவர் குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் குடியேறிவிட்டார். சமீபத்தில் இவரது வலைதள பக்கத்தில் பகிர்ந்த புகை படத்தினை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏன்னெனில் அவர் ஊன்றுகோல் வைத்து நடப்பது போல் உள்ள புகை படத்தினை பகிர்ந்துள்ளார். அவரது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் கால் சரியாகும் வரை ஊன்றுகோல் துணையுடன் நடப்பதாகவும், விரைவில் நல்ல உடல் நிலைக்கு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பக்கங்களை தொடரும் ரசிகர்கள் இதனால் வருத்தம் அடைந்துள்ளனர். அவரது புகைப்படங்களை இங்கே காணலாம்..
