சினிமாவை தவிர்த்ததற்க்கான காரணமே இவை தான்…. வெளிப்படையாக கூறிய 90’s கலக்கல் நாயகி சங்கீதா….

தமிழ் சினிமாவில் 90s கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவருக்கென்று பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவர் 5 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் தமிழில் எல்லாமே என் ராசா தான் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் நடித்த பூவே உனக்காக படம் சூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் பூவே உனக்காக படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சரவணன் என்பவரை காதலித்து 2000 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது பல படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் வந்த தாலயே நடிக்க ஒத்துக்கொள்ளாமல் பல படங்களை தவிர்த்து விட்டதாகவும். மேலும் குழந்தை குடும்பம் என்று ஆனதால் அவைகளை பார்த்து கொள்ளவே நேரம் சரியாக இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள படத்தில் நடித்ததாகவும். தமிழில் நல்ல கதை கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் எனவும் கூறி உள்ளார். இவரின் நடிப்பை பார்ப்பதற்கு அவரின் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.