90 கிட்ஸ்களின் சிரிப்பழகி ’லைலா’க்கு இவ்வளவு பெரிய மகன்களா..? புகைப்படம் பார்த்து வியந்து போன ரசிகிரகள்..!


லைலா என்றதுமே சிரித்த முகத்தோடு நடிக்கும் அவரது முகம் தான் நம் எல்லோருக்கும் நினைவில் வரும். கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை லைலா.
உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா? என சீயான் விக்ரமோடு சேர்ந்து லைலா போடும் நடனம் ரொம்ப பிரபலம். மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய வகையில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்தார் லைலா. பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இதேபோல் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு ஜோடியாக ‘தீனா’ படத்தில் செம நடிப்பை வழங்கியிருப்பார் லைலா.

சினிமாவில் பிஸியாக இருந்த போதே, கடந்த 2006ம் ஆண்டு மே மாதம், ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹெதீன் என்பவரை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் தனது சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லைலா. அதன் பின்னர் இப்போது சில விளம்பரங்களில் தோன்றுகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருக்கிறார்.

இப்போது நடிகை லைலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்திருக்கும் மகன்கள், கணவரோடு இருக்கும் புகைப்படத்தை நீண்ட காலத்துக்கு பின்பு சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிரார் நடிகை லைலா. அதைப்பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துவருகின்றனர்.
pic1

pic2
