தன் குடும்பத்துடன் 61-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்…

பாரதிராஜாவால் சினிமா உலகிற்கு வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாகவும், கதாநாயகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் தற்போது அப்பாவாகவும் தாத்தாவாகவும் கூட வருகிறார். நடிகராக கலக்கி கொண்டிருந்த இவர் அரசியலிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.

இவரின் மூத்த மகன் தனுஷிற்கு சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோய் இருப்பதால் இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். சில மாதங்களாகவே இவரின் மகன் தனுஷின் திருமணம் பற்றி தான் சோசியல் மோடியால் அனைத்திலும் பேசப்பட்டு வந்தது. பல பேர் நெகட்டிவ் விமர்சனம் செய்து வந்தாலும் பல பேர் ஆதரவளித்து வந்தனர்.

இவர்களின் திருமணம் கோலாகலமாக சினிமா பிரபலங்கள் கூட ஜப்பானில் வைத்து நடைபெற்று வந்தது. தற்போது தனது புது மருமகள் மற்றும் குடும்பங்களுடன் நடிகர் நெப்போலியன் அவர்கள் தனது 61வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
