60’ஸ் இளைஞரின் ஆடலுக்கு… வெட்கப்பட்ட 70’ஸ்… மலம பித்தா பாடலுக்கு என்னம்மா ஆடுறார் பாருங்க..!

thatha_patti_dance_vid

இந்தியா முழுக்க ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல் எது என்றால் அது மலம பித்த பித்தாதே பாடல். இதற்கு இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் இது தென்னிந்தியர்களையும் தாண்டி வட இந்தியாவிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல். அரேபிய மொழியில் இருக்கும் சில வரிகள் புரியாவிட்டாலும், மெட்டிற்கு ஏற்ப இசையுடன் கேட்பதற்கும், நடிகர் விஜயின் நடனமும் இந்த பாட்டிற்கு மேலும் கவனம் பெறுகிறது.

திருமண நிகழ்ச்சியில் தொடங்கி பிறந்த நாள் கொண்டாட்டம் வரை இந்த பாடல் ஒலிக்காத வீடுகளும் இல்லை, திருமண மண்டபங்களும் இல்லை. இந்த பாடலுக்கு இளைஞர்கள் நடன திறமையால் நடனம் ஆடிய காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அனிருத் இசையை வட இந்தியர்கள் பாராட்டி வருவதோடு ……பாலிவுட்டிற்கு வருமாறு அழைப்பு விடுகின்றனர்.

மலம பித்தா பாடலை வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த 70-ஸ் 60-ஸ்சை சுற்றி சுற்றி ஆடினார். இதில் அவர் இடுப்பை சுழற்றி சுழற்றி ஆடியதை கண்டு வெட்கத்தால் புன்னகை புரிந்தார் அவரது மனைவி. வயதான காலத்திலும் தங்கள் வாழ்க்கையை நகைசுவையாகவும், ரசிப்போடும் வாழும் இந்த தம்பதியர் தற்கால மணமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.

You may have missed