50 வயதைக் கடந்த நடிகர் கரண்… தற்போது எப்படி இருக்கார் தெரியுமா..? இணையத்தில் லீக்கான வீடியோ..!
ஒருகாலத்தில் சாமிப்படங்களின் வில்லன் பாத்திரம் என்றாலே அது கிரண் தான் என்று சொல்லும் அளவுக்கு மனிதர் அந்த ரக பாத்திரங்களில் நடித்துக் குவித்தார். நடிகர் கிரண் முருகன் அடிமை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
1991ல் தீச்சட்டி கோவிந்தன் படத்தில் சின்ன ரோலில் தலைக்காட்டினார். அண்ணாமலையிலும் சின்ன ரோல் கிடைத்தது. தொடர்ந்து சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லாம் காதல் வாழ்க என 50க்கும் அதிகமான படங்களில் நடித்து இருந்தார்.
ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகில் பரபரப்பான நடிகராக இருந்த கிரண் வாய்ப்பு இல்லாமல் போனார். ஆனால் நீண்ட காலத்துக்கு பின்பு கிரணை ஹீரோவாகக் கொண்டுவந்த ‘கொக்கி’ படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து படவாய்ப்புகள் வரவில்லை. தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு பின்பு கிரண் சொல்லிக்கொள்ளும்படி அழுத்தமான படம் எதிலும் நடிக்கவில்லை. அண்மையில் இவர் ‘ஷ்ரூவ்வ்வ்வ்’ என்ற வில்லத்தன அசையை போட, அது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு சினிமா விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது வாங்கியுள்ளார். அதற்க்கான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகின்றது.
நாயகன் மீண்டும் வர
— தம்பி வெட்டோத்தி (@Karan_Army) September 5, 2022
எட்டுத்திக்கும் பயம்தானே..????????????@ActorKaranOffl @KDmgold pic.twitter.com/I9BNfm8rVz