2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் அதிகமாக கூகுளில் தேடிய படங்கள்… முதல் இடத்தில் இந்த படமா..!!
ஒவ்வொரு வருடமும் எந்த படம் திரையரங்கிற்கு வரும் அதனை பார்க்கலாம் என ரசிகர்கள் கூட்டம் ஆர்வலராக காத்திருப்பது இயல்புதான். இது ஒரு பக்கம் இருப்பினும் பாதிக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரையில் படத்தை பார்த்த பின்னும் படம் நன்றாக இருந்தால் அதை கூகுளில் தேடி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட படங்கள் என லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் 2024ஆன இந்த வருடம் எடுத்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் பாலிவுட் படமான ஸ்ட்ரீ2 படம் வந்துள்ளது. இதில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், வருண் தவான் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்திலும் பாலிவுட் படமான கல்கி 2898 ஏடி3. 12-த் பெயில் படம் வருகிறது. இதில் தீபிகா படுகோன் மற்றும் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
இந்நிலையில் இந்த வரிசையில் நம் தமிழ் படங்களும் இடம் பிடித்துள்ளது. இந்தியாவிலே 6வது இடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படமும் 8வது இடத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த தி கோட் படமும் வந்து சாதனை படைத்துள்ளது.