120வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய திருச்செந்தூர் பாட்டி… நீண்ட ஆயுளுக்கு சொல்லும் சூப்பர் டிப்ஸ்..!

    இந்தத் தலைமுறையினர் 50 வயதைக் கடப்பதே ஆச்சர்யம் என்றாகிவிட்டது. காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானவையாக இல்லை. அதுமட்டும் இன்றி, இப்போது இளவயதிலேயே அதிக மாரடைப்புகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் நம் கண்முன்பே ஒரு பாட்டி 120 வயதைத் தொட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு ஆச்சர்யமான விசயம்.

  அதிலும் பாட்டியின் 120வது பிறந்தநாளை மொத்தக் குடும்பமும் சேர்ந்து கேக் வெட்டி மிக, மிக உற்சாகமாகக் கொண்டாடியுள்ளது. திருச்செந்தூர் அருகில் உள்ள வீரபாண்டியன்பட்டிணம் கிங் காலனியைச் சேர்ந்தவர் வள்ளித்தாய்.இவருக்குத்தான் 120 வயது. இவருக்கு நான்கு மகள்களும், மூன்று மகன்களுமாக ஏழு பிள்ளைகள். அவர்கள் வழி பேரன், கொள்ளுப்பேரன், ஓட்டன், ஓட்டி என இவரது குடும்பமே ஒரு ஊராட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். அண்மையில் பாட்டிக்கு 120வது வயதுவர, குடும்பமே சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

 பாட்டி வள்ளித்தாயியிடம் 120 வருசம் வாழும் ஆரோக்கிய டிப்ஸ் பற்றிக் கேட்டால் “இப்பத்தான் எல்லாத்துக்கும் மிஷின் வந்துடுச்சே. எங்க காலத்துல மிக்ஸி இல்ல. அம்மியில் அரைச்சோம். கிரைண்டர் இல்லை. ஆட்டுக்கல்லில் மாவு அரைச்சோம். பாரம்பர்யமான உணவுகளை சாப்பிட்டோம். இப்போ ஒரே பாஸ்ட் புட்டால சாப்பிடுறீங்க. சைக்கிள் கூட கிடையாது. நடந்தேதான் போவோம். அதனால் சர்க்கரை நோய், பிரஷர்ன்ன்னு எதுவுமே வரலை. இன்னிக்கும் கண்ணு நல்லாத் தெரியும். காது நல்லா கேட்கும். அதுக்கு அந்த காலத்தில் நிறைய உடலுழைப்பு செஞ்சதுதான் காரணம்.”என்கிறார்.

அடேங்கப்பா…பாட்டிக்கு நாமளும் வாழ்த்து சொல்லுவோம்  பிரண்ட்ஸ்…