நெகட்டிவ் விமர்சனத்தால் கங்குவா படத்தின் 12 நிமிடக் காட்சிகள் நீக்கம்…

2 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவரும் படம் தான் கங்குவா. இப்படத்திற்கு சூர்யாவின் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பல எதிர் விமர்சனங்களையே பெற்று வந்தது.இதனால் அவரது மனைவி மற்றும் நடிகையுமான ஜோதிகா அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து 12 நிமிடட் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவலை அறிவித்துள்ளது.இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.இப்படத்தை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருவதால் தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்தப்படம் 2 மணிநேரம் 22 நிமிடம் மட்டுமே ஓட கூடிய அளவில் உள்ளது.இப்படத்தின் நிகழ் கால நிகழ்வுகள் மட்டுமே நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இதற்க்கு மேல் எதிர் விமர்சனங்கள் படத்திற்கு வராது என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
