ஹீரோ லுக்கில் போஸ் கொடுக்கும்…ஆல் டைம் ஃபேவரைட் வில்லன் ரகுவரனின் மகனா..? அவர மாதிரியே இருக்காரே பாருங்க..!

தமிழ் திரையுலகில் நடிப்பே தன் உயிர் மூச்சாக கொண்டு நடிப்பவர்கள் சிவாஜி, கமல், ரஜினி, விக்ரம் போன்ற நடிகர்களின் பட்டியலில் இடம் பெறுபவர், நடிகர் ரகுவரன். இவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை.இவர் பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் இவர் நடிக்க கூடிய வில்லன் கதாபாத்திரம் மக்கள் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இவர் நடித்த பாட்ஷா, முதல்வன், ரட்சகன், அமர்க்களம், முத்து, காதலன், போன்ற படங்கள் இன்று வரைக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கின்றன. இவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாவை வாழ்ந்து, நடிப்பவர் நடிகர் ரகுவரன் .

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிகை ரோஹினியே 1996 திருமணம் செய்து கொண்ட பின் இருவரும் 2004-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் 2008-ஆம் ஆண்டு நடிகர் ரகுவரன் இயற்கை எய்தினார். அவர் மறைவிற்கு பின் ரகுவரன் இசையமைத்து பாடிய 6 பாடல்களை ஆல்பமாக தயாரித்து, ரஜினிகாந்த் அதை வெளியிட்டார், இதை நடிகை ரோகினி மற்றும் ரகுவரன் மகன் சாய் ரிஷிவரன் பெற்று கொண்டனர்.

தற்போது ரோகினி அவரது மகனுடன் இருக்கும் புகைப்படமானது வெளிவந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ரகுவரனின் மகனுக்கு சினிமாவிற்கு வரும் அனைத்து தகுதிகளும் உள்ளன என்று கூறுகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2: