வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் நடிகரின் இப்போதைய பரிதாப நிலை.. அடடே இந்த மனுசனுக்கு இப்படியொரு நிலமையா..?

   சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால் இன்று பெரிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். ‘லேசா பறக்குது மனசு’ என இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

  2009 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ், இந்தப்படத்தில் நாயகன் விஷ்ணு விசாலின் நண்பராக நடித்தவர் ஹரி வைரவன். இதற்குப் பின்னர் இவர் குள்ளநரிக் கூட்டம் படத்திலும் சிறந்த நடிப்பை வழங்கினார். அதன் பின்பு இவரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு, உதவி இயக்குனரும், பத்திரிகையாளருமான புகாரி, தனது புஹாரி ஜங்சன் யூடியூப் சேனல் மூலம் அவரையும், அவரது மனைவியையும் பேட்டி எடுத்துள்ளார்.

 அதில் அவர், “எங்க வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சு. திடீரென்னு ஒரு நாள் அவருக்கு உடம்பு சரியில்லாமப்போச்சு. பேச்சு, மூச்சு இல்லாமல் அவர் இருந்ததைப் பார்த்துட்டு பலரும் செத்துட்டாருன்னு சொன்னாங்க. ஆனாலும் நான் நம்பிக்கையை விடல. ஆஸ்பத்திரிக்கு கூட்டிபோயிட்டேன். அவருக்கு கோமாவுக்கு போனது அப்போ தான் தெரிஞ்சுது. அவருக்கு சுகர் ப்ராப்ளம் உண்டு. அதில் கை, கால் எல்லாம் வீங்கியிருந்துச்சு. அவர் மெல்ல நடக்க வேண்டுமென கோமாவில் இருந்து கண் விழிச்சதும் மருத்துவர்கள் சொன்னாங்க. ஆனால் அவர் அதிக எடை இருந்ததால் என்னால் தனியாக அதைச் செய்ய முடியல.

   பிளாக் பாண்டி, கார்த்திக், சரவணன் என அவரது நண்பர்கள் உதவுகிறார்கள். இப்போதும் அவரது சிகிச்சைக்கு பத்துநாள்களுக்கு 8000 ரூபாய் வீதம் செலவாகிறது சொந்த வீட்டை விற்று மருத்துவச் செலவையும், கடனையும் அடைத்தோம். இன்னும் ஆறுமாதம் நல்ல சிகிச்சைக் கிடைத்தால் என் கணவர் மீண்டுவிடுவார். “என்று கண்கலங்கக் கூறுகிறார். இந்த நடிகருக்கு இப்படியொரு நிலையா என நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.