வெகுநாள் கனவை நிறைவேற்றிய தொகுப்பாளினி மணிமேகலை.. என்ன ஆசை நிறைவேறியதுன்னு தெரியுமா..?

சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர்மணிமேகலை. இவர் நடன மாஸ்டர் ஹூசைன் என்பவரைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துகொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளியும் ஒன்று. இதிலும் இப்போது கோமாளியாக வந்து அசத்தினார் மணிமேகலை. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியது இவருக்கு நல்லபெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. மணிமேகலை, ஹூசைன் ஜோடி சமீபத்தில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கியது. இதை மணிமேகலையும் மகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

காதல் திருமணம் செய்த மணிமேகலையை இன்னும் அவரது குடும்பத்தினர் சேர்த்துக் கொள்ளவில்லை. அண்மையில் மணிகேமலைக்கு பிறந்தநாள் வந்தது. அதற்கு அவரது காதல் கணவர் உசைன், அவரது பூர்வீக ஊரில் சொந்தமாக நிலம்வாங்கிக்கொடுத்து அசத்தியிருக்கிறார். iஇதன் மூலம் சொந்த ஊரில் நிலம் வாங்க வேண்டும் என்ற மணிமேகலையின் வெகுநாள் கனவும் நிறைவேறியிருக்கிறது. குடும்பத்தின் சப்போர்ட்டே இல்லாமல், இந்த காதல் ஜோடி வளர்ந்து வருவதற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
