வில்லி தோற்றத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா…. 90ஸ் கால கடத்தில் கொடிகட்டி பரந்த நடிகரும் இவர்தான்.. புகைப்படம் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

ramesh_aravinth_pic_nzz

அஞ்சலீ ….. அஞ்சலீ….. புஷ்பாஞ்சலி……பாடல் இந்த கால தலைமுறையினரும் முணு…. முணுக்கும்….. .ஏ.ஆர்.ரஹ்மானின் ரம்மியமான பாடலாகும். இந்த பாடல் இடம்பெற்ற படம் டூயட், இதை இயக்கியவர் இயக்குனர்கே.பாலச்சந்தர் அவர்கள். இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த் மற்றும் இளையத்திலகம் பிரபு கதாநாயகர்களாக நடித்திருப்பார்கள். இதில் கதநாயகியாக மீனாட்சி சேஷாத்ரி பிரபல 90-ஸ் தமிழ்,மற்றும் ஹிந்தி நடிகை நடித்திருப்பார்.

ரமேஷ் அரவிந்த் அவர்கள் தமிழ்நாட்டில் , கும்பகோணத்தில் , பிறந்துள்ளார். அவரது தாய் மொழி கன்னடம். பெங்களூரில் பொறியியல் பயின்றவர் பொறியியல் கல்லூரில் பணிபுரிந்த போது mc யாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நேரத்தில் நடிகர் கமல்ஹாசனுடைய நட்பு கிடைத்துள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சதிலீலாவதி, பஞ்ச தந்திரம், மும்பை எஸ்பிரஸ் போன்ற படங்களில் உலக நாயகன் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். 1983-ல் இருந்து இருவரும் நீண்ட கால நண்பர்களாக இருக்கின்றனர்.இருவரது படங்களிலும் இருவரும் பங்கேற்பார்கள்.

இவர் முதலில் அறிமுகம் ஆனது கன்னட துறையில் என்றாலும் கே. பாலச்சந்தர் தமிழில் அறிமுகபடுத்திய, பின்னர் தமிழில் இவருடைய படங்கள் வெற்றி பெற்ற பிறகே கன்னட இயக்குனர்கள் இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர். 140 படங்களில் நடித்த இவர் Zee- டிவிசேனலில் கன்னடத்தில் வீக்கெண்ட் வித் ரமேஷ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சி கன்னடாவில் உள்ள புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும். மேலும் இவர் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். உத்தம வில்லன் திரைப்படத்தை இயக்கியவர் ரமேஷ் அரவிந்த் ஆவார் .

பேச்சாளராக ……இளைஞர்கள் தங்கள் கனவினை நேர்மையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற வேண்டும் என தனது பேச்சாற்றல் மூலம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உந்து சக்தியாக இருக்கிறார். பல மொழி திரைதுறையில் பிலிம் பேர் விருதுகளை மட்டும் இல்லாமல் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.கன்னடத்தில் வெளியான ஒரு படத்தில் ரமேஷ் அரவிந்த் பெண் வேடமிட்டு நடித்திருப்பார் அந்த படத்தின் புகை படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அச்சு அசலாக நடிகை வனிதா விஜயகுமார் போன்று இருப்பதால் வலைத்தளத்தினர் சற்று குழப்பம் அடைந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…..

You may have missed