விக்ரம் பட புகழ் ஏஜெண்ட் டீனாவா இது? விஜய்..அஜித்..சூர்யாகூடவெல்லாம் நடிச்சுருக்காங்களே.. பாருங்க…!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் கமல் ஹாசன். திரைப்படக் காட்சிகளுக்காக எந்த ரிஸ்கும் அவர் எடுப்பதால் தான் அவரை உலக நாயகன் என அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கமல்ஹாசன் இன்று தமிழ்த்திரையுலகில் நடிப்பு ஆளுமையாக இருக்கிறார்.

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார் கமல். இது 50 நாள்களைக் கடந்து இப்போதும் திரையில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இத்தனைக்கும் ஓடிடி தளத்தில் வெளியான பின்பும், தியேட்டர்களில் பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் கமல். விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா பாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இவர் நிஜத்தில் நடன இயக்குநர். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் அவர், “பிருந்தா மாஸ்டர், அவரது சகோதிரி கலா மாஸ்டர் ஆகியோருடன் துணை நடன இயக்குனராக இருந்தேன். சினிமாவுக்கு வந்து முப்பது வருசம் ஆச்சு. இதற்கு முன்பே விஜய்யின் பகவதி, அஜித்தின் வில்லன், சூர்யாவின் ப்ரண்ட்ஸ் படங்களிலும் க்ரூப் டேன்ஸ் ஆடியுள்ளேன். விக்ரம் படம் தான் அறிமுகப்படம் போல் வேற லெவலில் ஹிட் ஆக்கிவிட்டது.”என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் அம்மணி.
pic1

pic2
