விக்ரம் பட கிளைமேக்ஸில் கமல் பயன்படுத்திய துப்பாக்கி மடலா இது.. நிஜத்தில் எப்படி இருக்குன்னு பாருங்க..!

         தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் கமல் ஹாசன். திரைப்படக் காட்சிகளுக்காக எந்த ரிஸ்கும் அவர் எடுப்பதால் தான் அவரை உலக நாயகன் என அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கமல்ஹாசன் இன்று தமிழ்த்திரையுலகில் நடிப்பு ஆளுமையாக இருக்கிறார். 

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் இந்தப் படம் பெரும் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்பட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தப்படம் பெரும் வெற்றிபெற்ற சந்தோசத்தில் கமல்ஹாசனும், இயக்குனருக்கு கார் வாங்கிக் கொடுத்தார். 

 இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் கமல் ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்துவார். எம்.கே 38, 25 எம்.எம் மிஷின் கொண்டது அந்தத் துப்பாக்கி. இந்தத் துப்பாக்கியை நிஜத்தில் பயிற்சிக்காக பயன்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர். இதோ அந்தக் காட்சி உங்களுக்காக…