யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நக்ஷ்த்ராவுக்கு திடீர் கல்யாணம்… மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!

முன்பெல்லாம்வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.
அதிலும் விஜய் டிவி, சன் டிவிகளில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர்

அந்தவகையில் சின்னத்திரையில் ஜீ தமிழிலில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலும் செம ஹிட். இதில் வெண்ணிலா என்னும் கேரக்டரில் நடித்தவர்தான் நக்ஷத்ரா. அந்த சீரியல் முடிவடைந்த பின்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் நக்ஷத்ரா. அண்மையில் சின்னத்திரை நடிகை நக்ஷ்த்ராவுக்கு கல்யாணம் முடிந்துள்ளது. இவரது கல்யாணம் காதல் கல்யாணம்!

நக்ஷ்த்ரா ஜூ தமிழ் தொலைகாட்சியில் எக்ஸிகியூட்டிவ்சராக பணியாற்றி வரும் விஸ்வா என்பவரைக் காதலித்துக் கல்யாணம் செய்துள்ளார். இவர்களது திருமணப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்
