போலீஸ் ட்ரெயினிங் எப்படி இருக்குன்னு பாருங்க… டாணாக்காரன் படத்துல பார்த்த மாதிரியே இருக்கே…!

    சின்ன வயதில் குழந்தைகள் நான்கு பேரைக் கூப்பிட்டு  வளர்ந்து என்ன வேலைக்கு செல்ல விரும்புகிறாய் எனக் கேட்டால் ஒரு குழந்தையாவது போலீஸ் வேலைக்குச் செல்வேன் என சொல்வதைக் கேட்டிருப்போம். போலீஸ் வேலை இன்றும் தமிழகத்தில் பல இளைஞர்களுக்கும் பெருங்கனவாக இருக்கிறது.

   போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என தொடர்ந்து சீறுடைப் பணியாளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டே இருப்பவர்கள் அதிகம்பேர் உண்டு. போலீஸ் வேலையில் வெகுசிலர் செய்யும் லஞ்சம், கடுமை காரணமாக பொதுவாக மொத்தத் துறையையும் குறைபட்டுக்கொள்ளும் சூழலும் உண்டு. ஆனால் இங்கே அனைவரும் அப்படி அல்ல. காவல்துறை உங்கள் நண்பன் எனச் சொல்வதைப் போல, நிஜத்திலும் அப்படியே நடந்துகொள்ளும் நல்ல காக்கிகளும் இங்கே இருக்கிறார்கள்.

  போலீஸ் வேலையில் மிகவும் கஷ்டமான காலம் என்றால் அது ட்ரெயினிங் காலம் தான். அந்த நேரம் மிகவும் கடினமாக இருக்கும். கடினமான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதோ இப்போது போலீஸாரின் அப்படியான ட்ரெயினிங் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அச்சு, அசலாக டாணாக்காரன் படத்தில் பார்த்ததைப் போலவே இருப்பதாகக் கமெண்ட் செய்துவருகின்றனர். 

https://youtube.com/watch?v=xquEQ2JSxjQ