புன்னகை தேசம் நடிகர் தருணா இது…? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உண்டு. அவர் அதிகமாக பேசாவிட்டாலும் அவரது படங்கள் அதிகளவில் பேசப்படும். அவரது திரைப்படங்களும் மாறுபட்ட கதைகளத்தோடு இருக்கும். இயக்குனர் மணிரத்தினம் இயக்கி 1990 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தான் அஞ்சலி. முழுக்க குழந்தைகளை மையப்படுத்திய இந்த படம், அந்த ஆண்டின் சிறந்த படமாக இருந்ததோடு, இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. 

  அந்த படத்தில் வரும் மூன்று குழந்தைகளில் அர்ஜூன் என்னும் கேரக்டரில் சிறுவனாக நடித்தவர் நடிகர்தருண். தெலுங்கானாவைச் சேர்ந்த இவரது தந்தை சக்ரா பாணி ஓரியா மொழி நடிகராவார். இவரது தாய் ராஜமணி தெலுங்குத் திரையுலகில் நடித்துவந்தார். தருண், அஞ்சலி படத்தில் நடிக்கும்போது அவருக்கு 11 வயதுதான்!  தொடர்ந்து அவர் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

தெலுங்கில் ‘நுவ்வே காவாலி’ படம்  மூலம் ஹீரோவாக அறிமுகமான தருண் தமிழிலும் எனக்கு 20 உனக்கு 18 , புன்னகை தேசம் உள்பட சில படங்களிலும் நடித்திருந்தார். இடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தியதாக கைதும் செய்யப்பட்டு, வெளியில் வந்தார் தருண். தற்போது ட்தெலுங்கில் லவ் ஸ்டோரி என்னும் படட்தில் மட்டும் சின்ன ரோலில் நடித்துவரும் தருண், போதிய பட வாய்ப்பு இல்லாததால் கிடைத்த வேலையையெல்லாம் செய்து வாழ்க்கையை ஓட்டிவருகிறார்.இது அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.