பத்ரி திரைப்படத்தில் இளையதளபதிக்கு வில்லனாக நடித்தவரா இவர்? தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..!

இளைய தளபதி விஜய்க்கு தமிழக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரது திரைப்படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள். விஜய் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவிட்டாலும் இன்றும்கூட விஜய் நடித்த முந்தையப் படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் ரசிகர்கள் பார்க்கத் தவறுவதில்லை.

அந்த அளவுக்கு விஜய்க்கு ரசிகர்கள் உண்டு. கடந்த 2001 ம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடித்து வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் ‘பத்ரி’ இந்தப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் பூபேந்தர் சிங். இவர் ஹிந்தி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் பத்ரி படத்தில் ரோஹித் என்னும் கேரக்டரில் நடித்தார்.

பத்ரி திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டாலும் அதற்கு பின்பு பூபேந்தர் சிங்கிற்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது ஆள் அடையாளமே தெரியாமல் முற்றாக நரைத்த முடியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை அண்மையில் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் பூபேந்தர் சிங். அதைப் பார்த்த ரசிகர்கள் பத்ரி படத்தில் வாட்ட,சாட்டமான உடலோடு செம வில்லத்தனம் காட்டிய பூபேந்தர் சிங்கா இது? அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே? என ஆச்சர்யத்தோடு பகிர்ந்துள்ளனர்.
